மகள்களை விற்க வரும் தந்தைகள் – சந்தையில் ஏலம் கேட்கும் ஆண்கள்!
மணமகள் சந்தை என்ற விசித்திர முறையை நாடு ஒன்று பின்பற்றி வருகிறது.
மணமகள் சந்தை
பல்கேரியா நாட்டில் மணமகள் சந்தை என்ற முறை ஒன்று செயல்பட்டு வருகிறது. இதனை ஜிப்சி மணப்பெண் சந்தை என அழைக்கின்றனர்.
இந்த சந்தையில் மக்கள் அலைந்து திரிந்து தங்களுக்கு பிடித்த மனைவிகளை தேர்வு செய்து வாங்கி செல்கின்றனர். சந்தை முற்றிலும் அந்நாட்டு அரசின் அனுமதி பெற்று நடக்கிறது. இது அனைத்து பெண்களுக்கும் பொருந்தாது, ஏழை பெண்களுக்காக மட்டுமே இந்த மணமகள் சந்தை அமைக்கப்பட்டுள்ளது.
ஏலத்திற்கு பெண்கள்
பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பங்கள், தங்களின் மகள்களை இந்த சந்தைக்கு அழைத்து செல்கின்றனர். கலையடி சமூகத்தினர் தான் அதிகம் தங்களின் மகள்களை இங்கு விற்கின்றனர். இந்த பெண்களை வாங்கும் ஆண் மகனும் அதே சமூகத்தை சேர்ந்தவனாக இருக்க வேண்டும்.
வாங்கிய பெண்ணுக்கு மருமகள் அந்தஸ்தை ஆணின் குடும்பம் கட்டாயம் வழங்க வேண்டும் என சில நிபந்தனைகளும் விதிக்கப்படுகிறது. பெண்களை ஏலத்தில் எடுக்க, வருடக்கணக்கில் இளைஞர்கள் உழைத்து காசு சேமிக்க வேண்டுமாம். இதன் மூலம் டேட்டிங் மற்றும் பிற சமூகங்களுடன் திருமணம் செய்வதை தடை செய்து வைத்துள்ளனர்.