;
Athirady Tamil News

மட்டக்களப்பு வாவியின் அவல நிலை!

0

கிழக்கின் அழகு மிக்க வாவியானது இன்று அசிங்கப்பட்ட நிலையில் காணப்படுவதை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது.

கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டக்களப்பு வாவியில் பலவிதமான கழிவுகளையும் கொண்டு போடுவதனால் வாவி மாசடைந்த நிலையில் காணப்படுகின்றது.

குறித்த வாவியின் மூலமாக பல மீனவர்கள் தங்களது வாழ்வாதார நடவடிக்கையில் ஈடுபடுகின்ற போதிலும் அந்த மீன்களை மட்டக்களப்பு மாவட்டத்திலும் இலங்கையின் பல பாகங்களிலும் உள்ள மக்கள் சாப்பிட்டு வருகின்றனர்.

மட்டக்களப்பு மாநகர சபை
ஆனாலும் குறித்த வாவியின் பக்கத்தில் உள்ள பொதுமக்களால் தங்களது கழிவு பொருட்களை உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய கழிவுகளையும் வாவியினுள் கொண்டு போடுவதன் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் சுகாதார நிலைமை கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டக்களப்பு மாநகர சபையினால் கழிவு அகற்றல் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்ற போதிலும் தங்களது கழிவு பொருட்களை அழகான வாவியில் கொண்டு மாசடைய வைக்கும் மக்கள் எதற்காக இவ்வாறு செயல்படுகின்றார்கள் என்று கேள்வியும் தற்போது எழும்பியுள்ளது.

குறித்த வாவியினை சுத்தமாக வைத்திருக்க வேண்டியது மாவட்டத்தில் உள்ள அனைவருக்கும் ஒரு தலையாயக் கடமையாக இருந்தாலும் இவ்வாறு தங்களது உக்கும் உக்காத கழிவு பொருட்களை வாவியில் போடுவதன் மூலம் பலருக்கு பாதிப்பு ஏற்படுத்தலாம் எனவும் கருதப்படுகிறது.

ஆகவே சுகாதாரத்துக்கு சீர்கேடாக காணப்படும் குறித்த வாவியினை சுத்தம் செய்வதோடு இந்த வாவியில் கழிவுப்பொருட்களை கொண்டு போடுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுத்து மட்டக்களப்பு மக்களின் சுகாதார நலனுக்கு உதவி செய்யுமாறு தெரிவிக்கப்படுகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.