;
Athirady Tamil News

நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட மிக சிறிய வகை நுளம்பு இனம்

0

கம்பஹா மாவட்டத்தின் மீரிகம பிரதேசத்தில் தவளைகளின் இரத்தத்தை குடிக்கும் Uranotaenia Trilineata எனப்படும் புதிய வகை நுளம்பு இனம் ஒன்று இலங்கை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த நுளம்பினமானது இலங்கையில் தற்போது பதிவாகியுள்ள மிக சிறிய வகை நுளம்பு இனமாகும் என பூச்சியியல் நிபுணர் கயான் ஸ்ரீ குமாரசிங்க தெரிவித்துள்ளார்.

நுளம்பு இனங்களின் எண்ணிக்கை
மேலும், இந்த நுளம்புகள் 2-3 மில்லிமீற்றர் அளவுள்ளவை எனவும் இலங்கையில் இனங்காணப்பட்ட நுளம்பு இனங்களின் எண்ணிக்கை 156 ஆக அதிகரித்துள்ளது எனவும் கூறியுள்ளார்.

சுமார் 108 வருடங்களுக்கு முன்னர் தென் கொரியாவில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த நுளம்பு இனம் தாய்லாந்தில் கண்டறியப்பட்ட பின்னர் தற்போது இலங்கையில் கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.