சுற்றுலாப்பயணிகளுக்கான இலவச விசா திட்டம்:அமைச்சரவை அங்கீகாரம்
இந்தியா, சீனா, ரஷ்யா, மலேசியா, ஜப்பான், இந்தோனேஷியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளின் சுற்றுலாப்பயணிகள் இலங்கை வருவதற்கான இலவச விசா வழங்கும் திட்டத்துக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.
குறித்த திட்டமானது 2024 மார்ச்(31) வரை நடைமுறையில் இருக்குமென குறிப்பிடப்பட்டுள்ளது.
இலவச விசா
இந்த விடயத்தினை சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தனது உத்தியோகபூர்வ எக்ஸ் பக்கத்தில் (டுவிட்டர் ) பதிவிட்டுள்ளார்.
Cabinet approved visa free to India , China , Russia , Malaysia , Japan , Indonesia and Thailand as a pilot project till 31 March with immediate effect. #visitsrilanka #srilankayoucomebackformore
— Harin Fernando (@fernandoharin) October 23, 2023
கடந்த 18ஆம் திகதி “சீனா, இந்தியா, ரஷ்யா, தாய்லாந்து மற்றும் இந்தோனேசியா ஆகிய ஐந்து நாடுகளுக்கு இலவச விசா அனுமதிக்கான ஏற்பாடுகள் அனைத்தும் தயாராக உள்ளது” என சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.