லண்டனில் பலஸ்தீன ஆதரவு பேரணியில் கலந்துகொண்ட நபர் பணி இடைநீக்கம்
லண்டனில் சுரங்க தொடருந்து சாரதி ஒருவர் பலஸ்தீன ஆதரவு பேரணியில் கலந்துகொண்டதற்காக வேலையிலிருந்து நீக்கப்பட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த ஆதரவு பேரணியானது கடந்த சனிக்கிழமை(21) முன்னெடுக்கப்பட்டிருந்தது.
லண்டனில் இஸ்ரேல் ஹமாஸ் தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும் என சுமார் 100,000 மக்கள் பேரணியில் திரண்டிருந்தனர்.
பலஸ்தீனத்திற்காக ஆதரவு
ஆதரவு பேரணியில் பலஸ்தீனத்திற்காக ஆதரவு தெரிவித்து முழக்கமிட்ட மக்கள், கைகளில் பலஸ்தீன கொடிகள் மற்றும் பதாகைகளையும் ஏந்தியிருந்தாக கூறப்பட்டிருந்தது.
மேலும் போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என கோரிக்கையை முன்வைத்திருந்தனர்.
இடைநீக்கம் செய்யப்பட்ட தொடருந்து சாரதியும் ஆதரவு பேரணியில் கலந்துகொண்டிருந்த நிலையில் ஊடகவியலாளர் தொடருந்து சாரதி பாலஸ்தீன விடுதலை குறித்து முழக்கமிடுவதை காணொளியாக பகிர்ந்துள்ளார்.
இஸ்ரேலிய தூதரகம்
இதன்படி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட சாரதி அடையாளம் காணப்பட்டு, பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் அந்த காணொளி தொடர்பான முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து இஸ்ரேலிய தூதரகமானது ”லண்டன் ரயில்களில் இத்தகைய சகிப்புத்தன்மை இல்லாததைப் பார்ப்பது மிகவும் கவலை அளிக்கிறது.
பொதுப் போக்குவரத்து அனைவருக்கும் பாதுகாப்பு மற்றும் சமத்துவம் உள்ளடக்கிய இடமாக இருக்க வேண்டும்” என தெரிவித்துள்ளது.