;
Athirady Tamil News

மாலை 6 மணி முதல் ஆம்னி பேருந்துகள் இயங்காது – ஊர் திரும்ப காத்திருக்கும் மக்கள் அதிர்ச்சி!

0

மாலை 6 மணி முதல் ஆம்னி பேருந்துகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆம்னி பேருந்துகள்
தென் மாநில ஆம்னி பேருந்துகளின் கூட்டமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், `தமிழ்நாட்டில் ஆம்னி பேருந்துகளுக்கு கட்டணம் நிர்ணயம் இல்லாதபோதிலும்,

அரசுக்கும் பயணிகளுக்கும் பாதிக்காத வண்ணம் சங்கங்களே கட்டணம் நிர்ணயம் செய்து, 2022 செப்டம்பர் மாதம், போக்குவரத்துறை அமைச்சர் மற்றும் ஆணையர் ஆகியோர் தலைமையில் நடந்த கூட்டத்தில் கட்டணம் ஒப்புதல் பெற்று,

என்ன காரணம்?
அதே கட்டணத்தில் இன்று வரை இயக்கிக் கொண்டிருக்கிறோம். ஆனால், கடந்த 10 நாள்களாக அண்ணாநகர் சரக இணை ஆணையர் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர் ஆகியோரும் சங்கங்களுடன் இணைந்து சங்கங்கள் நிர்யணயித்த கட்டணத்துக்கு மிகாமல் கண்காணித்து, இன்று வரை அதிக கட்டணம் புகார் இல்லாமல் இயங்கிக்கொண்டிருந்தன.

ஆனால், ஆயுதபூஜை மற்றும் விஜயதசமி ஆகிய 4 நாள்கள் தொடர் விடுமுறையை முன்னிட்டு தவறு செய்யாமல் இயங்கிக் கொண்டிருந்த 120 ஆம்னி பேருந்துகளை அதிக கட்டணம் என்ற பெயரில் ஆணையரின் தவறான வழிகாட்டுதலின்படி சிறைப்பிடித்திருக்கின்றனர்.

எனவே, மீண்டும் சிறைப்பிடிப்பதை நிறுத்தக் கோரி, இன்று (24.10.2023) மாலை 6 மணி முதல் ஆம்னி பேருந்துகள் இயங்காது.’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.