உயிரிழந்த உடல்களில் வெடிகுண்டுகள்; அம்பலாமான ஹமாஸ் அமைப்பின் சூழ்ச்சி – கொடூரம்!
உயிரிழந்தவர்களின் சிலரது உடல்களில் வெடிகுண்டுகளை இணைத்து விட்டு தப்பியோடியுள்ளனர்.
கொடூர தாக்குதல்
18வது நாளாக இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் படைகளுக்கும் இடையே போர் தாக்குதல் நிலவி வருகிறது. இருதரப்பிலும் பலி எண்ணிக்கை 4,000த்தை கடந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இஸ்ரேல் போர் விமானங்கள் தெற்கு காசா மீது சரமாரியாக குண்டுகளை வீசின. இந்த மோதல் உலகப்போருக்கு வழிவகுக்கும் வாய்ப்பு அதிகம் என பல அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
ஹமாஸ் சூழ்ச்சி
தொடர்ந்து, வடக்கு காசாவிலுள்ள மக்களை வெளியேறி தெற்கு காசாவில் குடியேறுமாறு எச்சரித்துள்ளனர். கடந்த 7-ந்தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி விட்டு தப்பிய பின்னர், மீதமுள்ள வெடிகுண்டுகள் மற்றும் ஆயுதங்களை சேகரிக்கும் பணியில் இஸ்ரேல் ஈடுபட்டு வருகிறது.
இதில், உயிரிழந்த சில உடல்களில் வெடிகுண்டுகள் இணைக்கப்பட்டு உள்ளதும் தெரிய வந்துள்ளது. இதுபற்றிய சில புகைப்படங்களை ஐ.டி.எப். வெளியிட்டுள்ளது.
மேலும், ழந்தைகள் பள்ளிக்கு போகும்போது கொண்டு செல்ல கூடிய பை ஒன்று வயல்வெளியில் கிடக்கிறது. ஆனால், அதில், ரிமோட் உதவியுடன் வெடிக்க கூடிய 7 கிலோ எடை கொண்ட வெடிகுண்டு மறைத்து வைக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம், ஹமாஸ் கொடூர சூழ்ச்சியில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது.