உலகிலேயே வயதான நாய்… 31 வயதில் மரணம்!
உலகின் மிகப் பழமையான நாயாக தேர்ந்தெடுக்கப்பட்ட போபி, கடந்த வாரம் போர்ச்சுகலில் உள்ள ஒரு விலங்கு மருத்துவமனையில் இறந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உலகிலேயே வயதான நாய்
1992 ஆம் ஆண்டு மே 11 ஆம் திகதி இந்த நாய் பிறந்தது. ஒரு நாய் சராசரியாக 14 ஆண்டுகள் மாத்திரமே உயிர் வாழும். ஆனால் இந்த நாய் சுமார் 11,478 நாட்கள் அதாவது 31 ஆண்டுகள் உயிருடன் இருந்துள்ளது.
இதனாலேயே உலகிலேயே வயதான நாய் என்ற உலக சாதனை பட்டத்தையும் கடந்த பெப்ரவரி மாதம் பெற்றது.
கடந்த மே 11 ஆம் திகதி போபியின் 31 வது பிறந்தநாளும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.
இந்நிலையில் இந்த நாய் இறந்துவிட்டதாக அமெரிக்காவைச் சேர்ந்த கால்நடை மருத்துவரான டாக்டர் கேரென் பெக்கர் தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.