ஹமாஸிற்கு விழுந்த பேரடி: பாரிய தாக்குதல்களை முறியடித்த இஸ்ரேல்
ஹமாஸ் அமைப்பின் திறன்களை அழிப்பதற்காக, கடந்த 24 மணிநேரத்தில் 400க்கும் மேற்பட்ட ஹமாஸின் இலக்குகள் அழிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.
குறித்த அறிவிப்பானது இஸ்ரேல் பாதுகாப்பு படையால் எக்ஸ்(டுவிட்டர்) சமூக ஊடகத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
தொடர்ந்து 18 நாட்களாக நடைப்பெற்று வரும் இஸ்ரேல் ஹமாஸ் யுத்ததினால் இருதரப்பிலும் 4000 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன் குழந்தைகள் பெண்கள் உட்பட்ட பலர் காயமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இஸ்ரேல் பாதுகப்பபு படை
கடந்த 7 ஆம் திகதி இஸ்ரேல் மீது காசாவை சேர்ந்த ஹமாஸ் இயக்கித்தினர் திடீர் தாக்குதல் நடத்தினர். அதில் இஸ்ரேலை சேர்ந்த மக்கள் கொல்லப்பட்டதோடு 210 பேரை பணய கைதிகளாக சிறை பிடித்துச்சென்றனர்.
அதனை தொடர்ந்து இஸ்ரேல் காசா மீது, தரை, வான் மற்றும் கடல் வழியேயான தாக்குதலை நடத்தவும் திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் இஸ்ரேல் பாதுகப்பு படையானது ஹமாஸின் 400 இற்கும் மேற்பட்ட இலக்குகளை அழித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
மேலும், இஸ்ரேலை நோக்கி ரொக்கெட்டுகளை ஏவி தாக்குதல் நடத்த ஹமாஸ் அமைப்பு திட்டமிட்டு இருந்துள்ளதாகவும். இஸ்ரேலுக்குள் கடல் வழியே ஊடுருவுவதற்கு, ஹமாஸ் அமைப்பு சுரங்க பாதைகளை அமைத்திருந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களின் பாதுகாப்பு
அத்தோடு, மசூதிகளை இந்த அமைப்பானது கட்டளை மையங்களாக பயன்படுத்தி கொண்டதுடன், ஆயுதங்களை பதுக்கி வைக்கவும் பயன்படுத்தியுள்ளது.
அதேவேளை அந்த எக்ஸ் பதிவில், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இஸ்ரேல் பாதுகாப்பு படை தொடர்ந்து, செயல்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.