;
Athirady Tamil News

வடக்கிலும் கால் பதித்த சீனா

0

இலங்கையில் கடந்த சில காலமாக சீனாவின் செயற்பாடுகள் தெற்கை நோக்கியதாக இருந்த நிலையில் தற்போது வடக்கிலும் தனது செயற்பாட்டை மெல்ல ஆரம்பித்துள்ளது.

இந்நிலையில், இந்த மாத ஆரம்பத்தில் யாழ்ப்பாணத்தில் சினோபெக் நிறுவனம் பெட்ரோல் விநியோகத்தை ஆரம்பித்த நிலையில் இன்று(24) செவ்வாய்க்கிழமை மானிப்பாய் மெமோறியல் வீதியில் சினோபெக் ஒயில் வகைகளை அறிமுகம் செய்து விநியோக முகவரை அறிமுகப்படுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதன்போது, யாழ்ப்பாணத்திற்கான தனது விநியோகஸ்தராக கோல்ட் மவுன்ட் பிறதர்ஸ் பிறைவட் லிமிட்டட் என்னும் நிறுவனத்தினை சினோபெக் ஒயில் நிறுவனத்தின் இலங்கையின் ஏக விநியோகஸ்தரான இன்டர்நஷனல் லுப்ரிக்கட் பிறைவட் லிமிட்டட் நிறுவனம் இன்று மானிப்பாயில் ஆரம்பித்துள்ளது.

பங்குதாரர்கள்
குறித்த நிகழ்வில் பங்குதாரர்களான பிரதான நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜயசாந்த தொட்டஹேவகே, தேசிய விற்பனை முகாமையாளராக துசிதகுமார, விற்பனை முகாமையாளர் எம்.குகன் விருந்தினர்களாக கலந்து கொண்டதுடன் சினோபெக் எரிபொருள் விற்பனை முகாமையாளர்கள் வாகன திருத்துநர்கள் வாகன உதிரிப்பாக விற்பனையாளர்கள் பொது மக்கள் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.