தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு விடுத்துள்ள எச்சரிக்கை!
தற்போது நாடளாவிய ரீதியில் 67,000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் டொக்டர் நளின் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.
இன்று (24) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
டெங்கு அபாய வலயங்கள்
“இன்று வரை மாத்திரம் இந்த மாதத்தில் 2500க்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
இதேவேளை, நாட்டில் பெய்து வரும் மழையுடனான காலநிலையால் டெங்கு அபாய வலயங்களின் எண்ணிக்கை அதிகரிப்புக்கு வழிவகுத்துள்ளது.
அத்துடன், கடந்த காலத்தில் நாளாந்தம் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 70 தொடக்கம் 80 வரை இருந்த போதிலும், நாளாந்த டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 100 ஐ தாண்டியுள்ளது.
அதிகளவு டெங்கு தொற்று பதிவாகும் மாவட்டங்களில் கொழும்பு மாவட்டம் அபாய மட்டத்தில் உள்ளது.” என்றார்.