அமெரிக்காவில் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்ட 150 கார்கள்: 7 பேர் உயிரிழப்பு
அமெரிக்காவில் கடும் பனிப்பொழிவு காரணமாக நடந்த சங்கிலி தொடர் கார் விபத்தில் 7 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
கடும் பனிப்பொழிவு
அமெரிக்காவின் லூசியானா நகரில் கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது.
இந்த பனிப்பொழிவுடன் காட்டுத்தீயால் ஏற்பட்ட புகையும் சேர்ந்து கொண்டதால் சாலையில் 10 அடிக்கு அப்பால் உள்ள வாகனங்கள் தெரியாத நிலை ஏற்பட்டது.
இதனால் ஆற்று பாலத்தில் சென்ற 150 க்கும் மேற்பட்ட கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்தில் சிக்கியது.
இந்த விபத்தில் 7 பேர் வரை உயிரிழந்த நிலையில், 25 பேர் வரை காயமடைந்துள்ளனர்.
இதற்கிடையில் பாலத்தில் எளிதில் தீப்பற்றக்கூடிய ரசாயனங்கள் ஏற்றிக் கொண்டு வந்த லொறி உடனடியாக பாலத்தில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டது.