;
Athirady Tamil News

டயனா கமகே – ரோஹன பண்டார மோதல் சிசிரிவி காட்சிகள்! சபாநாயகரிடம் ஒப்படைப்பு

0

டயனா கமகே – ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ரோஹன பண்டார மற்றும் சுஜித் சஞ்சய் பெரேரா ஆகியோருக்கும் இடையே இடம்பெற்ற மோதல் தொடர்பான சிசிரிவி காட்சிகள் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிசிரிவி காணொளிகள், இந்த சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள குழுவிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த மோதல் சம்பவம் கடந்த 20 ஆம் திகதி நாடாளுமன்ற நூலகத்திற்கு அருகாமையில் இடம்பெற்றிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து, குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை நடத்துவதற்காக பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ தலைமையில் ஐவரடங்கிய குழுவொன்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தனவினால் நியமிக்கப்பட்டது.

இந்த குழுவில அமைச்சர் ரமேஷ் பத்திரன, நாடாளுமன்ற உறுப்பினர்களான சமல் ராஜபக்ஷ, கயந்த கருணாதிலக மற்றும் இம்தியாஸ் பாக்கீர் மார்க்கர் ஆகியோர் உள்ளடங்குகின்றனர்.

எவ்வாறாயினும், குழுவில் பெண்களின் பிரதிநிதித்துவம் அவசியமாவதால், பொருத்தமான பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களை பரிந்துரைத்து அனுப்புமாறு கட்சித் தலைவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ தெரிவித்தார்.

இதற்கமைய முன்மொழியப்படும் இரண்டு பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறித்த குழுவில் இணைத்துக் கொள்ளப்படுவர் என அவர் குறிப்பிட்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.