;
Athirady Tamil News

சர்வதேச கடல் எல்லையில் கடத்தலில் ஈடுபட்ட இலங்கையர்கள் உட்பட 12 பேர் கைது

0

இலங்கை – இந்திய சர்வதேச கடல் எல்லையில் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட இலங்கையர்கள் உட்பட 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்ட சுங்கத்துறை அதிகாரிகளுக்கு இலங்கையிலிருந்து தங்கம் படகில் கடத்தி வரப்பட்ட இருப்பதாக கிடைத்த இரகசிய தகவலையடுத்து நேற்றுமுன்தினம் (23.10.2023) இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்களிடமிருந்து 9 லட்சம் ரூபாய் மதிப்பிலான கடத்தல் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சர்வதேச கடல் எல்லையில் தூரத்தில் இந்திய கடற்பரப்பில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்த இலங்கை புத்தளம் பகுதியை சேர்ந்த 4 கடற்றொழில் படகுகளையும் அதிலிருந்த 8 இலங்கை நபர்களிடம் இந்திய கடலோர காவல் படையினர் விசாரித்தனர்.

விசாரணையில் அவர்கள் சந்தேகத்திற்கிடமாக பதில் அளித்ததால் அவர்களை கைது செய்த இந்திய கடலோர காவல் படை வீரர்கள் மண்டபம் அழைத்து வந்து கொண்டிருந்த போது நடுக்கடலில் மண்டபம் மரைக்காயர் பட்டணத்தைச் சேர்ந்த நாட்டு படகை பிடித்து சோதனை செய்த போது படகில் 35 மூட்டைகளில் 594 கிலோ சமையல் மஞ்சள் மற்றும் 300 கிலோ பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகள் இருந்துள்ளன.

சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைப்பு
படகையும் அதிலிருந்த நால்வர் என மொத்தமாக 12 பேரை கைது செய்து மண்டபம் தெற்கு மீன்பிடி துறைமுகம் அழைத்து சென்று அவர்களிடம் நடத்திய விசாரணையில் கடல் அட்டைகள் மற்றும் சமையல் மஞ்சள் மூட்டைகளை புத்தளம் மற்றும் கல்பிட்டிக்கு கடத்திச் சென்ற போது பிடிபட்டதாக ஒப்புக்கொண்டனர்.

தமிழகத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட கடத்தல் பொருட்களை பெற்று செல்வதற்காக 4 படகுகளில் இலங்கை நபர்கள் காத்திருந்ததும் விசாரணையில் தெரியவந்ததை அடுத்து தமிழகத்தை சேர்ந்த நால்வரையும் கடத்தல் பொருட்களுடன் ராமநாதபுரம் சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கபட்டனர்.

மேலும் இலங்கை சேர்ந்த நான்கு படகையும் அதிலிருந்து எட்டு நபர்களையும் மண்டபம் மரைன் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

பின்னர் அவர்கள் மீது சட்டவிரோதமாக கடவுச்சீட்டு இன்றி இந்தியாவுக்குள் நுழைந்தாக வழக்கு பதிவு செய்து ராமேஸ்வரம் நீதிமன்றத்தில் நடைமுறைப்படுத்தி புழல் சிறையில் அடைப்பதற்கு நடவடிக்கைகள் நடைபெற்று வருகிறது. இதேவேளை தனுஷ்கோடி கடல் வழியாக நடைபெற்று வரும் சட்டவிரோத நடவடிக்கைகளை தடுப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.