;
Athirady Tamil News

காலாவதியான விசாவுடன் இஸ்ரேலில் தங்கியுள்ள இலங்கையர்கள்: முன்னெடுக்கப்படவுள்ள நடவடிக்கை

0

செல்லுபடியாகும் வீசா இன்றி இஸ்ரேலில் தங்கியுள்ள இலங்கையர்களுக்கு விசா வழங்க இஸ்ரேலுக்கான இலங்கை தூதரகம் தீர்மானித்துள்ளது.

அதன்படி இஸ்ரேலில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் நேற்றும் (24)-இன்றும்(25) இவ்வாறு தங்கி இருப்பவர்களின் தகவல்களை சேகரிக்கும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

இந்நிலையில், நேற்று செல்லுபடியாகும் வீசா இன்றி இஸ்ரேலில் தங்கி இருப்பவரகள் ஏராளமானோர் குறித்த இடத்திற்கு வருகை தந்தந்தாக தெரிவிக்கப்படுகிறது.

வேலை வாய்ப்பு
இஸ்ரேல் குடிவரவுத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஐல் சிஸ்ஸோ உள்ளிட்ட மூன்று சிரேஷ்ட அதிகாரிகள் இலங்கைத் தூதரகத்திற்கு விஜயம் செய்து, தாதியர்களுக்கும், வீசா இல்லாத ஏனைய இலங்கையர்களுக்கும் விசா வழங்குமாறு குடிவரவுத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்திடம் கோரிக்கை விடுத்ததாக தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.

வீசா காலாவதியான பின்னரும் இஸ்ரேலில் தங்கியுள்ள இலங்கையர்களின் வீசாக்களை புதுப்பிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், அந்த கோரிக்கையை இஸ்ரேல் குடிவரவு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஏற்றுக்கொண்டுள்ளார்.

இதன்படி, செல்லுபடியாகும் வீசா இன்றி இஸ்ரேலில் தங்கியுள்ள இலங்கையர்களின் தகவல்கள் கோரப்பட்டுள்ளதாக தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.

மேலும், விசா நீடிக்கப்பட்டதன் பின்னர் அந்த இலங்கையர்களுக்கு விவசாயத் துறையில் வேலை வாய்ப்புகளை வழங்குவதற்கும் பணிப்பாளர் நாயகம் இணங்கியதாக தூதுவர் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.