இஸ்ரேலிய இளைஞர்கள் இலக்கு… பணயக்கைதிக்கு 10,000 டொலர் வெகுமதி: ஹமாஸின் கொடூரம் அம்பலம்
இஸ்ரேலிய ராணுவத்திடம் சிக்கிய ஹமாஸ் உறுப்பினர்கள் தொடர்பான விசாரணைப் பதிவுகள் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
10,000 டொலர் வெகுமதி
இஸ்ரேலிய இளைஞர்களை கொல்ல ஹமாஸ் மேலிடம் தங்களுக்கு உத்தரவிட்டிருந்ததாகவும், முதியவர்கள், பெண்கள் மற்றும் சிறார்கள் என சிக்குபவர்கள் அனைவரையும் கடத்தி வரவும் கூறப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மட்டுமின்றி, ஒவ்வொரு பணயக்கைதிக்கும் 10,000 டொலர் வெகுமதி அளிக்க ஹமஸ் மேலிடம் உறுதி அளித்திருந்ததாகவும் அத்துடன் குடியிருப்பு ஒன்றும் அவர்களுக்கு பரிசளிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.
இஸ்ரேலியர்களை அதிக எண்ணிக்கையில் கடத்த வேண்டும் என்பதே இதன் நோக்கமாகவும் கூறப்படுகிறது. அக்டோபர் 7ம் திகதி முன்னெடுக்கப்பட்ட தாக்குதல் என்பது இஸ்ரேலிய மக்களை சிறைபிடிப்பதும் கடத்துவது மட்டுமே நோகமாக இருந்தது என விசாரணையில் தெரிவித்துள்ளனர்.
அக்டோபர் 7ம் திகதி நடந்த அதிரடி தாக்குதல் சம்பவத்தின் போது இஸ்ரேலிய ராணுவத்திடம் சிக்கிய 6 ஹமாஸ் வீரர்களிடம் ராணுவம் மற்றும் பொலிசார் இணைந்து விசாரணை முன்னெடுத்துள்ளனர்.
ஹமாஸ் மேலிடம் வகுத்த திட்டம்
அன்று நடந்த ஒவ்வொரு நடவடிக்கையும் ஹமாஸ் மேலிடம் திட்டமிட்டபடியே முன்னெடுக்கப்பட்டதாகவும், வெகுமதி தொகையை பெற சில நிபந்தனைகளும் விதிக்கப்பட்டதாக விசாரணையில் குறிப்பிட்டுள்ளனர்.
குடியிருப்புகளுக்கு நெருப்பு வைத்து, வீடு புகுந்து மொத்த உறுப்பினர்களையும் கொலை செய்வது, இளம் பெண்களுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டு அவர்களை கடத்துவது என மொத்தமும் ஹமாஸ் மேலிடம் வகுத்த திட்டம் என்றே அந்த 6 பேர்களும் தெரிவித்துள்ளனர்.
Be’eri பகுதியில் மட்டும் குறைந்தது 130 இஸ்ரேலிய மக்கள் கொல்லப்பட்டனர். மட்டுமின்றி, 15 அல்லது 16 வயது மதிக்கத்தக்க சிறுமி ஒருவரையும் ஹமாஸ் அப்பகுதியில் இருந்து கடத்தியுள்ளனர்.
விசாரணையின் போது, அந்த 6 ஹமாஸ் உறுப்பினர்களும், இஸ்லாம் மதம் பெண்கள், குழந்தைகள் மற்றும் சிசுக்களைக் கொல்வதைத் தடைசெய்துள்ளது எனவும், ஆனால் தாங்கள் செய்த அட்டூழியங்கள் ஐ.எஸ் அமைப்பு செய்தவற்றிலிருந்து வேறுபட்டவை அல்ல எனவும் குறிப்பிட்டுள்ளனர்.