இலங்கையில் பயங்கரவாத தாக்குதலுக்கு இணையான தாக்குதலுக்கு தயாராக இருந்த நபர்
பிரபல பாதாள உலகக் குழுத் தலைவன் ஹரக் கட்டா என அழைக்கப்படும் நந்துன் சிந்தக்க என்பவரை காப்பாற்ற குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்குள் அதிநவீன நுட்பம் ஒன்று பயன்படுத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஹரக் கட்டா தற்கொலைப்படை தீவிரவாத தாக்குதலுக்கு சமமான தாக்குதல் ஒன்றிற்கு தயாராகி இருந்ததும் நேற்று(24.10.2023) தெரியவந்துள்ளது.
இந்த பாரிய குற்றத்தை செய்யவிருந்த குறித்த சந்தேக நபர் தற்போது குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
குற்றப்புலனாய்வு திணைக்களம்
எப்படியிருப்பினும் இந்த விடயம் தொடர்பில் கொழும்பு குற்றப்புலனாய்வு திணைக்களம் நேற்று பிற்பகல் கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகேவிடம் விசேட அறிக்கையொன்றை சமர்ப்பித்துள்ளது.
அதில் ஹரக் கட்டாவுக்கு கமாண்டோ உடை அணிவித்து, தடுப்புக் காவலில் இருந்து தப்பிக்க வைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு உண்மைகளை நீதிமன்றில் அறிவிக்குமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.