ரணில் எடுத்த திடீர் முடிவு! தொலைபேசியில் அழைத்து கடும் தொனியில் எச்சரித்த மகிந்த
சிறிலங்கா அமைச்சரவையில் ஏற்பட்ட திடீர் மாற்றத்தினால் பல குழப்பங்கள் ஏற்பட்டு வருகின்ற நிலையில் தற்போது ரணில் விக்ரமசிங்கவிற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.
அதாவது அமைச்சரவையில் மாற்றங்களை மேற்கொள்ள அதிபர் ரணில் விக்ரமசிங்க மேற்கொண்ட தீர்மானம் தவறானதென சிறிலங்கா பொதுஜன பெரமுன குற்றம் சாட்டிவருகிறது.
திடீர் தொலைபேசி அழைப்பு
அத்துடன் இது தொடர்பில் பொதுஜன பெரமுனவின் தலைவர் மகிந்த ராஜபக்ச, ரணில் விக்கிரமசிங்கவுக்கு திடீர் தொலைபேசி அழைப்பொன்றை மேற்கொண்டு கணிசமான நேரம் கருத்துகளை பரிமாறிக்கொண்டதாக கூறப்படுகிறது.
மொட்டு கட்சி வகித்து வந்த அமைச்சுப் பதவிகள் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் இரண்டு அமைச்சர்களுக்கு வழங்கப்பட்டமை மகிந்தவை அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
“இந்த அரசாங்கத்தை அமைப்பதற்கும் உங்கள் நிலைப்பாட்டைக் காப்பாற்றுவதற்கும் மொட்டு கட்சி உங்களுக்கு ஆதரவளிக்கிறது, அதை மறந்துவிடாதீர்கள்” என்றும் மகிந்த ராஜபக்ச கடும் தொனியில் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.