;
Athirady Tamil News

தனியார் வைத்தியசாலைகளில் தாய் சேய் நலப் பிரிவினை வலுப்படுத்தல்

0

கல்முனை பிராந்திய தனியார் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறும் தாய் சேய் சுகாதார தரவுகளை புள்ளி விபரங்களுடன் திரட்டி அதனை சுகாதார அமைச்சின் இனப்பெருக்க சுகாதார மேலாண்மை தகவல் அமைப்பு – 2 இல் மின்னணு முறையில் பதிவு செய்தல் தொடர்பான செயலமர்வு இன்று (24) கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இடம்பெற்றது.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம்.றிபாஸ் அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் கீழ் சுற்றுச்சூழல் மற்றும் தொழில்வாண்மை சுகாதாரப் பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி Dr.ஏ.எஸ்.எம்.பௌஸாத் அவர்களினால் ஒருங்கிணைப்பு செய்யப்பட்ட குறித்த செயலமர்வு பிரதிப் பணிப்பாளர் டொக்டர் எஸ்.ஆர்.இஸ்ஸடீன் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கல்முனை பிராந்திய தனியார் வைத்தியசாலைகளின் பிரதிநிதிகள் உத்தியோகத்தர்கள் எனப்பலர் கலந்துகொண்டனர். இதன்போது குடும்ப சுகாதார பணியகத்தின் கண்கானிப்பு மற்றும் மதிப்பீட்டு பிரிவு சமூக வைத்திய நிபுணர் கௌசல்யா கஸ்தூரியாராச்சி, சுகாதார தகவல் மருத்துவ அதிகாரி டொக்டர் உதயங்க யாப்பா பண்டார மற்றும் பிராந்திய சுற்றுச்சூழல் மற்றும் தொழில்வாண்மை சுகாதாரப் பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் ஏ.எஸ்.எம்.பௌஸாத் ஆகியோர் வளவாளர்களாக கலந்துகொண்டு விரிவுரையாற்றினர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.