ஷாக்கிங்.. இனி ரேஷன் கார்டு செல்லாது – ரத்து செய்ய அரசு அதிரடி உத்தரவு!
ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்போவதாக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
ரேஷன் கார்டுகள்
இந்திய நாட்டிலுள்ள ஏழை எளிய மக்களுக்கு உதவுவதற்காக ரேஷன் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் மலிவு விலைகளில் உணவுப் பொருட்களை அரசு வழங்கி வந்தது. ரேஷன் கார்டு வைத்திருக்கும் குடும்பங்களுக்கு மட்டுமே இந்த உதவிகள் கிடைக்கும்.
இதில் தற்பொழுது பல மோசடிகள் நடந்து வருகிறது, அது அரிசி, கோதுமை, சர்க்கரை போன்ற உணவுப் பொருட்களை குறைந்த விலைக்கு வாங்கி அவற்றை வெளியே அதிக விலைக்கு விற்பனை செய்கின்றனர்.
இதுபோன்ற திருட்டு சம்பவங்கள் அதிகமாக நடப்பதால் உண்மையிலேயே உதவி தேவையான மக்கள் பாதிக்கப்படுகின்றனர். இந்த மோசடிகளை தடுப்பதற்காக மத்திய அரசு அதிரடியாக நடவடிக்கை எடுத்து வருகிறது.
அரசு அதிரடி
இந்நிலையில், கர்நாடக மாநிலத்தில் மொத்தம் 1.1 கோடி பிபிஎல் அட்டைதாரர்கள் உள்ளனர். ஆனால், கடந்த 6 மாதங்களாக 3.40 லட்சம் கார்டுதாரர்களுக்கு ரேஷன் வழங்கப்படவில்லை. அத்தகைய அட்டைகளை ரத்து செய்ய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதில் 6 மாத காலமாக ரேஷன் கார்டுகள் உபயோகிக்காமல் இருக்கும் கார்டுகளை ரத்து செய்ய அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும், ரேஷன் கார்டுகளை ரத்து செய்வதால் இலவச ரேஷன் உட்பட எந்த வகையான அரசு வசதிகளும் கிடைக்காது. தீவிர நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற முடியாது. ஓய்வூதிய வசதி கிடைக்காது. மத்திய அரசின் திட்டங்களை கூட பெறுவதில் சிரமம் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.