டயானா கமகேவை தாக்கிய எம்.பி: நடாளுமன்றில் எடுக்கப்பட்ட முடிவு
நாடளுமன்ற வளாகத்தில் அண்மையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்காக சபாநாயகரால் நியமிக்கப்பட்ட குழு நாடாளுமன்றத்தில் இன்று (25) கூடியது.
இராஜாங்க அமைச்சர் டயானா கமகே, ஐக்கிய மக்கள் சக்தி நாடளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய் பெரேரா மற்றும் ரோஹன பண்டார ஆகியோருக்கு இடையிலான மோதல் குறித்து விசாரணை நடத்தவே இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.
பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ, சமல் ராஜபக்ஷ, கயந்த கருணாதிலக, இம்தியாஸ் பாக்கீர் மார்க்கர், ரமேஷ் பத்திரன ஆகியோர் சம்பந்தப்பட்ட குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
உயர்ந்த நடவடிக்கை
இதன்படி, சம்பவம் தொடர்பான நாடளுமன்றத்தின் சிசிரிவி காணொளி காட்சிகள் இன்று அவதானிக்கப்பட்டது.
இது தொடர்பில் பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ச கூறியுள்ளதாவது, இந்த சம்பவத்தின் முக்கிய சாட்சியாக இராஜாங்க அமைச்சர் பியால் நிஷாந்த அடையாளம் காணப்பட்டார்.எனவே அவர் அடுத்த குழுவிற்கு அழைக்கப்படுவார்.
மேலும், இந்த சம்பவத்தில் தொடர்புடைய அமைச்சர்கள் மற்றும் இரண்டு எம்.பி.க்கள் அடுத்த குழுவிற்கு அழைக்கப்படுவார்கள்.
அத்தோடு,குழுவின் ஆதரவிற்கு இரண்டு பெண் எம்.பி.க்களின் ஆதரவைப் பெறவும் இன்று முடிவு செய்யப்பட்டது.
அந்த குழுவின் அறிக்கையின் படி குறித்த மோதலில் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் எந்த பதவியில் இருந்தாலும் உயர்ந்த நடவடிக்கை எடுக்கப்படும்” என கூறியுள்ளார்.
அதேவேளை, குறித்த குழுவின் அடுத்த கூட்டம் 6 ஆம் திகதி கூடவுள்ளது.