Online App மூலம் வந்த மெசேஜை நம்பி ரூ.90 லட்சத்தை அனுப்பிய மருத்துவர்: காத்திருந்த அதிர்ச்சி
இந்திய மாநிலம், கர்நாடகாவைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் ஒன்லைன் செயலி மூலம் ரூ.90 லட்சத்தை இழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Online App -ல் ரூ.90 லட்சம் முதலீடு
கர்நாடகா மாநிலம், பெங்களூரு கன்னிங்காம் சாலையில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள மருத்துவர் ஒருவரின் செல்போனுக்கு மெசேஜ் வந்துள்ளது.
அதில், இந்த ஒன்லைன் செயலி மூலம் பங்கு சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபத்தை பெற முடியும் என கூறப்பட்டிருந்தது.
இதனால், கடந்த செப்டம்பர் 20 -ம் திகதி முதல் அக்டோபர் 4 -ம் திகதி வரை பல்வேறு தவணைகள் மூலம் ரூ. 90 லட்சத்தை ஒன்லைன் செயலிக்கு மருத்துவர் அனுப்பியுள்ளார்.
கடைசியில் மோசடி
இதனையடுத்து, அந்த செயலியை தொடர்பு கொன்டு மருத்துவர் கேட்டுள்ளார். அப்போது அவர்கள், நீங்கள் செய்த முதலீட்டில் ரூ.40 லட்சம் லாபம் பெற்றுள்ளதாக கூறினர்.
ஆனால், லாபத்தொகையை பெறுவதற்கு மேலும் ரூ.4 லட்சத்தை வழிகாட்டுதல் பணமாக கொடுக்க வேண்டும் என்று கூறினார்கள்.
இதனையடுத்து, தாம் ஏமாற்றப்பட்டதை அறிந்த மருத்துவர் பொலிசில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக, பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பெங்களூருவில் தொடர்ந்து சைபர் குற்றங்கள் அதிகரித்து வருவதால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.