மருதமுனை பிரதேசத்தில் உள்ள தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை வழங்கி வைக்கும் நிகழ்வு
video link-https://fromsmash.com/
அம்பாறை மாவட்டத்தின் மருதமுனை பிரதேசத்தில் உள்ள தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை வழங்கி வைக்கும் நிகழ்வு மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரி மருதூர் கொத்தன் மண்டபத்தில் புதன்கிழமை (25) மாலை நடைபெற்றது.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினரும் கல்முனை தொகுதி அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவருமான சட்டத்தரணி எஸ்.எம்.எம். முஷாரப் பிரதம அதிதியாக கலந்து கொண்டு மாணவர்களுக்கு கற்றல் உதாரணங்களை வழங்கி வைத்தார்.
இதன் போது கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமானின் வேண்டுகோளின் பேரில் சீனாவின் யூவான் மாகாணத்தால் மாணவர்களுக்காக அன்பளிப்பு செய்யப்பட்ட ஒருதொகை கற்றல் உபகரணங்கள் 175 வறிய மாணவர்களுக்கான பகிர்ந்தளிக்கும் இந்நிகழ்வில் மருதமுனையின் அனைத்து பாடசாலைகளில் இருந்தும் தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள், பாடசாலைகளின் அதிபர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்வு கல்முனை பிரதேச அபிவிருத்திக்குழுவின் இணைப்பாளர் பி.எம்.எம் ஜௌபர் ஏற்பாட்டில் கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ் சஹூதுல் நஜீம் தலைமையில் சம்ஸ் மத்திய கல்லூரியின் அதிபர் எம்.எம். ஹிர்பகான் மற்றும் பாடசாலை நிர்வாகத்தினரின் ஒத்துழைப்புடன் இடம்பெற்றது.
மேலும் இந்நிகழ்வில் கிழக்கு மாகாண வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவரும் சட்டத்தரணியுமான ரணுஸ் மற்றும் பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்புச் செயலாளர் நியாஸ் பிரத்தியேக இணைப்பாளர் முபாறக் உட்பட பாராளுமன்ற உறுப்பினரின் பிரதேச ஒருங்கிணைப்பாளர்கள் உட்பட பலரும் வருகை தந்திருந்தனர்.