அரிசி விற்பனைக்கான அதிக பட்ச சில்லறை விலை நிர்ணயம்
அரிசிக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயிக்கும் 2278/02 எனும் வர்த்தமானி அறிவிப்பின்படி, அரிசியை விற்பனை செய்யக்கூடிய அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கீரி சம்பா ஒரு கிலோ 260 ரூபாவாகவும், சம்பா ஒரு கிலோ 230 ரூபாவாகவும், நாட்டரிசி ஒரு கிலோ 220 ரூபாவாகவும் மற்றும் சிவப்பு பச்சையரிசி ஒரு கிலோ 210 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அரிசியை அதிக விலைக்கு விற்பனை செய்தமை தொடர்பில் வழக்குத் தொடரப்பட்டால் தனிநபர் வியாபாரத்திற்கு குறைந்தபட்சம் ஒரு இலட்சம் ரூபா முதல் அதிகபட்சம் ஐந்து இலட்சம் ரூபா வரையிலும், தனியார் நிறுவனமொன்றுக்கு குறைந்தபட்சம் ஐந்து இலட்சம் ரூபா முதல் ஐந்து மில்லியன் ரூபா வரையிலும் அபராதம் விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்வது தொடர்பில் நாடளாவிய ரீதியில் தொடர்ச்சியாக சுற்றிவளைப்புகள் நடத்தப்படும் எனவும், அரிசியை அதிக விலைக்கு விற்பனை செய்தால் கடும் சட்டம் அமுல்படுத்தப்படும் எனவும் நுகர்வோர் அதிகாரசபை தெரிவித்துள்ளது.