இராணுவ கட்டுப்பாட்டில் இருந்து 33 வருடங்களின் பின் விடுவிக்கப்பட்ட ஞான வைரவர் ஆலய பாலஸ்தானம்
யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை மேற்கு, மாங்கொல்லை ஞான வைரவர் ஆலய பாலாலைய கும்பாபிஷேகம் இன்றைய தினம் வியாழக்கிழமை இடம்பெற்றது.
இன்றைய தினம் வியாழக்கிழமை காலை 7 மணிக்கு விநாயகர் வழிபாட்டுடன் பூஜைகள் ஆரம்பமாகி காலை 7.30 மணி தொடக்கம் 9.30 மணிவரையிலான சுப வேளையில் பாலஸ்தாபன கும்பாபிசேஷகம் இடம்பெற்றது.
குறித்த ஆலயமானது கடந்த 33 வருட காலமாக இராணுவ உயர் பாதுகாப்பு வலய பகுதிக்குள் இருந்த நிலையில் , கடந்த ஜூன் மாத கால பகுதியில் ஆலய சூழலையும் , அதனை அண்டிய சில பிரதேசங்களில் இருந்தும் இராணுவத்தினர் வெளியேறி சென்ற நிலையில் , ஆலய புனரமைப்பு வேலைகளை முன்னெடுக்கும் முகமாக பாலஸ்தாபன கும்பாபிசேஷகம் இடம்பெற்றது.