;
Athirady Tamil News

மனைவியை வேலைக்கு செல்லுமாறு கட்டாயப்படுத்த முடியாது; உயர்நீதி மன்றம் தீர்ப்பு

0

மனைவியை வேலைக்குச் செல்லுமாறு கணவர் கட்டாயப்படுத்த முடியாது என்று டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

புதுடெல்லியைச் சேர்ந்த தம்பதிகள் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக சமீபத்தில் விவாகரத்து பெற்றதால், மனைவிக்கு ஜீவனாம்சமாக கணவர் மாதந்தோறும் ரூ.25,000 வழங்க குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், ஜீவனாம்சத்தை ரூ.15,000-ஆக குறைக்க வலியுறுத்தி, டெல்லி உயர்நீதிமன்றத்தில் கணவர் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

கணவனால் வழங்கப்பட்ட மனு
அந்த மனுவில், தனது மனைவி பி.எஸ்சி பட்டதாரி என்பதால், அவரால் வேலைக்குச் செல்ல முடியும். எனவே, ஜீவனாம்சத்தை ரூ.15,000-ஆக குறைக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

வழங்கப்பட்ட மனுவை டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணை செய்த நீதிபதிகள், மனைவி ஒரு பட்டதாரி என்பதால், அவரை வேலைக்குச் செல்லுமாறு கட்டாயப்படுத்த முடியாது என்று தெரிவித்துள்ளனர்.

மேலும், திருமணத்திற்கு முன்னும், திருமணத்திற்கு பிறகும் வேலைக்கு செல்லாததால் கணவரிடமிருந்து ஜீவனாம்சம் பெற வேண்டும் என்ற ஒரே நோக்கத்துக்காக மனைவி வேலைக்குச் செல்ல மறுப்பதாகவும் அனுமானிக்கவும் முடியாது என்றும் கூறியுள்ளார்கள்.

பின்னர் கணவர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட நீதிபதிகள், ஜீவனாம்சத்தை உயர்த்தி தர வேண்டுமென மனைவி முன்வைத்த கோரிக்கையையும் நிராகரித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.