;
Athirady Tamil News

வெளிநாடொன்றில் இருந்து பெண்கள் உட்பட 28 இலங்கையர்கள் நாடு கடத்தல்

0

குவைத்தில் இருந்து 28 இலங்கையர்கள் இன்று காலை இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

குவைத்தில் நீண்ட காலமாக சட்டவிரோதமாக தங்கியிருந்து பல்வேறு இடங்களில் பணிபுரிந்து வந்த இலங்கை வீட்டுப் பணியாளர்கள் 28 பேர் நாடு கடத்தப்பட்ட நிலையில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அவர்கள் இலங்கைக்கு வருவதற்காக குவைத்தில் உள்ள இலங்கை தூதரகத்தில் பதிவு செய்த ஒரு குழுவாகும். மேலும் இந்த இலங்கையர்களை இலங்கைக்கு அனுப்புவதற்கு தூதரக அதிகாரிகள், பொலிஸ் குற்றப் புலனாய்வுத் துறை மற்றும் நீதித்துறையுடன் இணைந்து பணியாற்றினர்.

இந்தக் குழுவினர் இன்று 27ஆம் திகதி காலை 06:30 மணியளவில் குவைத்தில் இருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-230 இல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

24 வீட்டுப் பணிப்பெண்களும் 04 ஆண்களும் நாட்டை வந்தடைந்துள்ளனர். அங்கிருந்த பெண்களில் ஒருவர் கர்ப்பிணி எனவும் தெரியவந்துள்ளது.

வந்தவர்களில் பெரும்பாலானோர் அனுராதபுரம் மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களில் வசிப்பவர்களாகும்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில், இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் இந்தக் குழுவினர் தமது கிராமங்களுக்குச் செல்வதற்கான போக்குவரத்துக் கட்டணத்தைச் செலுத்தியது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.