ரஷ்ய ஜனாதிபதி புடின் புற்றுநோயால் உயிரிழந்ததாக வெளியான தகவல்: கிரெம்ளின் மாளிகை அளித்துள்ள விளக்கம்
ரஷ்ய ஜனாதிபதி புடின் புற்றுநோய் காரணமாக நேற்றிரவு உயிரிழந்ததாக டெலிகிராம் சேனல் ஒன்று செய்தி வெளியிட்டுள்ள விடயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி
புடினுடைய உடல் நிலை குறித்து நீண்ட நாட்களாக செய்தி வெளியிட்டுவரும் டெலிகிராம் சேனலான General SVR சேனல், நேற்றிரவு வெளியிட்ட செய்தி ஒன்றில், மக்கள் கவனத்துக்கு… தற்போது ரஷ்யாவில் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி ஒன்று நடைபெற்றுக்கொண்டுள்ளது.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இன்று மாலை 8.42 மணிக்கு, Valdaiயிலுள்ள தனது இல்லத்தில் மரணமடைந்தார். மருத்துவர்கள் உயிர் காக்கும் சிகிச்சையை நிறுத்தி, புடின் மரணமடைந்ததாக அறிவித்தனர்.
ராணுவ தளபதி Dmitry Kochnevஇன் உத்தரவின் பேரில், புடினுக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் புடினுடைய உடல் இருக்கும் அறையில் ஜனாதிபதியின் பாதுகாவலர்களால் பிடித்துவைக்கப்பட்டுள்ளார்கள்.
Dmitry Kochnev, ரஷ்ய கூட்டமைப்பு பாதுகாப்புக் கவுன்சில் செயலரான Nikolai Patrushevஉடன் தொடர்பிலிருக்கிறார்.
புடினைப்போல் தோற்றமளிக்கும் அவரது டூப்புக்கு பாதுகாப்பு இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது. பேச்சுவார்த்தைகள் பரபரப்பாக நடைபெற்றுக்கொண்டுள்ளன.
புடினுடைய மரணத்துக்குப்பின் யாராவது அவரைப்போல தன்னைக் காட்டிகொள்ள மேற்கொள்ளும் எந்த முயற்சியும் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியாக கருதப்படும் என விலாவாரியாக தெரிவித்துள்ளது General SVR சேனல்.
கிரெம்ளின் வட்டாரம் மறுப்பு
இந்த General SVR சேனல்இதற்கு முன்பும் இதேபோன்ற செய்திகளை வெளியிட்டுள்ளது, கடந்த வாரம் கூட புடினுக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும், அவர் தரையில் விழுந்து கிடந்ததாகவும் அந்த சேனல் தெரிவித்தது.
அத்துடன், நீண்ட நாட்களாகவே, புடினுக்கு புற்றுநோய் என்றும், தொலைக்காட்சியில் தோன்றுவது அவருடைய டூப் என்றும் இந்த சேனல்தான் கூறிவருகிறது.
ஆனால், அதற்கெல்லாம் மறுப்பேதும் தெரிவிக்காத கிரெம்ளின் மாளிகை, இம்முறை புடின் இறந்துவிட்டதாக கூறப்படும் செய்திக்கு மட்டும் மறுப்பு தெரிவித்துள்ளது.
அந்த செய்தி, ஆதாரமற்ற ஒரு புரளி என்று கூறியுள்ள கிரெம்ளின் செய்தித்தொடர்பாளர் ஒருவர், அதைக் கேட்டு கிரெம்ளின் வட்டாரத்தினர் புன்னகை மட்டுமே பூத்ததாக தெரிவித்துள்ளார்.