யாழில் சிங்கப்பெண்ணாக மாறிய இளம் பெண்; தலை தெறிக்க ஓடிய கொள்ளையர்கள்!
யாழ்ப்பாணம் – கொடிகாமத்தில் தனது சங்கிலியை அறுத்த வழிப்பறி கொள்ளையர்களை இளம் தாய் ஒருவர் துரத்திய போது , கொள்ளையர்கள் தமது மோட்டார் சைக்கிளை கைவிட்டு தலைதெறிக்க தப்பி சென்றுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
கொடிகாமம் பகுதியை சேர்ந்த இளம் தாய் ஒருவர் நேற்றைய தினம் வியாழக்கிழமை மதியம் தனது பிள்ளையை முன் பள்ளியில் இருந்து ஏற்றிக்கொண்டு வீடு திரும்பியுள்ளார்.
வழிப்பறி கொள்ளை
இதன் போது , ஆள்நடமாற்றம் அற்ற பகுதியில் மோட்டார் சைக்கிள் நின்ற இருவர் , அவரை மறித்து . நபர் ஒருவரின் பெயரை கூறி வினாவியுள்ளனர்.
இதன்போது குறித்த நபரை தனக்கு தெரியாது என கூறி, அவர் செல்ல முற்பட்ட வேளை அவரது கழுத்தில் இருந்த சங்கிலியை அறுத்துக்கொண்டு , பிள்ளையுடன் மோட்டார் சைக்கிளை தள்ளி விட்டு, தமது மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர்.
உடனே சுதாகரித்துக்கொண்ட இளம் தாய் , தனது மோட்டார் சைக்கிளில் சத்தமிட்டவாறு கொள்ளையர்களை துரத்தி சென்றார். அப் போது , வீதியில் பயணித்தவர்கள் கொள்ளையர்களை மடக்கி பிடிக்க முற்பட்ட வேளை கொள்ளையர்கள் தமது மோட்டார் சைக்கிளை கைவிட்டு தப்பி சென்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
மேலும் பொலிஸார் , கொள்ளையர்கள் கைவிட்டு சென்ற மோட்டார் சைக்கிளையும் பொலிஸ் நிலையம் எடுத்து சென்றுள்ளனர்.