ஆளுநர் அவரின் வேலையை மட்டும் பார்க்க வேண்டும்; வாய்க்கு வந்ததை எல்லாம் பேசக்கூடாது – விளாசிய சீமான்!
ஆளுநர் என்றால் ஆளுநர் வேலையை மட்டும் பார்க்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியுள்ளார்.
சீமான்
மருது சகோதரர்களின் குருபூஜையையொட்டி நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மரியாதை செலுத்தினார். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசியதாவது “ஆளுநர் மாளிகையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதற்கு எல்லாம் ஆட்சி கலைக்கப்படுமா என்ன? குண்டு வீசியவனுக்கும் இந்த ஆட்சிக்கும் ஏதோ சம்பந்தம் உள்ளதா?
ஆளுநர் அரசியல் பேசியதாலும், தினமும் அவதூறு குண்டை வீசியதாலும் வெறுப்பாகி போனவர்கள் குண்டை வீசி இருக்கலாம். ஆளுநர் என்றால் ஆளுநர் வேலையை மட்டும் பார்க்க வேண்டும். இதற்கு முன்பு இப்படியெல்லாம் குண்டு வீசினார்களா?; என்னத்தையாவது வாய்க்கு வந்ததை எல்லாம் ஆளுநர் பேசிக்கொண்டு இருக்கக் கூடாது.
பிரதமரை கேட்டா எடுத்தார்?
ஆளுநரை மாற்ற வேண்டாம் என முதலமைச்சர் சொல்கிறார். ஆனால் மாற்றுங்கள் என்று சொன்னாலும் அவர்கள் மாற்றிவிட்டுதான் மறுவேலை பார்ப்பார்கள் என்று சீமான் பேசினார். மேலும் பேசிய அவர் “சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க வேண்டும் என்று பிரதமருக்கு முதல்வர் கடிதம் எழுதுகிறார்.
பீகாரில் நிதிஷ்குமார் எடுத்த சாதிவாரி கணக்கெடுப்பை பிரதமரை கேட்டா எடுத்தார். சட்டநாதன் அறிக்கையை கிடப்பில் போட்ட பெருந்தகை ஐயா கருணாநிதிதான். திமுக அரசு சாதிவாரி கணக்கெடுப்பை எடுக்காது. ஏனென்றால் எத்தனை பேர் என் இடத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறான் என்பது தெரிந்துவிடும்” என்று சீமான் பேசினார்.