மீண்டும் அமைச்சரவையில் மாற்றம் : புது முகங்களை அறிமுகப்படுத்த திட்டம்
சிறிலங்காவின் அமைச்சரவையில் மீண்டும் மாற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தகவலறிந்த அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அடுத்த மாதம் நாடாளுமன்றத்தில் வரவு செலவு திட்டம் சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில், அதனை தொடர்ந்து குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுமென எதிர்ப்பார்க்கப்படுகிறது.
சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்கவால் குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுமென கூறப்பட்டுள்ளது.
புது முகங்கள்
சிறிலங்கா அமைச்சரவையில் அண்மையில் ரணில் விக்ரமசிங்க சில மாற்றங்களை மேற்கொண்டிருந்தார்.
இந்த நிலையில், அடுத்த மாதம் வரவு செலவு திட்டம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதை தொடர்ந்து மீண்டும் குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக தகவலறிந்த அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதன் போது சில புது முகங்களை அமைச்சரவை அமைச்சர்களாக அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொட்டு கட்சியினருக்கு பதவிகள்
அத்துடன், சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் சில உறுப்பினர்களுக்கு அமைச்சரவை அமைச்சர் பதவிகளும் இராஜாங்க அமைச்சர் பதவிகளும் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் மேலும் 10 சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு அமைச்சு பொறுப்புக்களை வழங்குமாறு கட்சி ஏற்கனவே கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.