காலையில் வெறும் வயிற்றில் லெமன் சால்ட் கலந்த தண்ணீர்: கிடைக்கும் நன்மைகள் ஏராளம்
எலுமிச்சையில் வைட்டமின் சி அதிகம் இருப்பதால், நம் உடலில் நோயெதிர்ப்பு சக்தியைப் பல மடங்கு அதிகரிக்கிறது.
எலுமிச்சை பொட்டாசியம், மூளை மற்றும் நரம்புகளை வெகுவாகத் தூண்டுகிறது. மேலும் சிவப்பு இரத்த அணுக்களின் உற்பத்தியைப் பெருக்கி, இரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்துகிறது.
காலையில் வெறும் வயிற்றில் எலுமிச்சை உப்பு கலந்த தண்ணீர் குடிப்பதால் உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும்.
கிடைக்கும் நன்மைகள்
காலையில் எழுந்திருக்கும் போது நமது உடல் நீர்சத்து Dehydrate ஆகிவிடுகிறது. எனவே காலையில் எழுந்ததும் தண்ணீர், உப்பு மற்றும் எலுமிச்சை கலந்த பானம் உடலுக்கு புத்துணர்ச்சியை தருகின்றது.
இந்த பானம் குடிப்பதால் இரத்த சர்க்கரை உப்பில் இருந்து கிடைக்கப்படும் முறையான மினரல் சத்துக்களை உறிஞ்சி இன்சுலின் அளவை சீராக்குகிறது. இதனால் இரத்த சர்க்கரை கட்டுக்குள் வைக்கப்படுகிறது.
மேலும் இந்த பானம் குடிப்பதால் இரத்த அழுத்தத்தைக் குறைப்பதற்கும், இதய துடிப்பை ஒழுங்குபடுத்துவதற்கும் உதவுகிறது.
எலுமிச்சையில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்துகிறது.
எலுமிச்சை மற்றும் உப்பு கலந்து தயாரிக்கப்படும் பானம் வயிற்றில் ஹைட்ரோகுளோரிக் அமிலம் உருவாகுவதை தூண்டுகிறது, இதனால் உணவு நன்கு செரிமானம் அடைகிறது.
இது உடலை நீரேற்றமாக வைத்துக்கொள்வதால் கீல்வாதம், சிறுநீரக கற்கள், பித்தப்பை கற்கள் மற்றும் மூட்டுவலிகள் வராமல் தடுக்கப்படுகிறது.
எலுமிச்சை மற்றும் உப்பு இரண்டும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் சிறப்பாக செயல்படுகிறது.
எலுமிச்சையில் உள்ள வைட்டமின்-சி உடலில் குளுடோதயான் உற்பத்திக்கு வழிவகுக்கிறது.
சிறுநீரகத்தில் இருக்கும் கற்களை உடைத்து வெளிக்கொண்டுவந்து சிறுநீரக கற்கள் உருவாவதை தடுக்க உதவுகிறது. மேலும் இந்த பானம் உடலின் உணர்திறன் pH சமநிலையைக் கட்டுப்படுத்த இந்த பானம் உதவுகிறது.