;
Athirady Tamil News

அதிகநாள் விடுமுறையால் வேலை இழப்பு : பின்னர் அடித்த ஜாக்பொட்

0

நிறுவனமொன்றில் வருடத்திற்கு ஆறு நாட்களே விடுமுறை எடுக்கலாம் என்ற நிலையில் அங்கு பணியாற்றும் ஒருவர் 69 நாட்கள் விடுமுறை எடுத்த நிலையில் அவர் பணிநீக்கம் செய்யப்பட்டார்.

அயர்லாந்தில் பரபரப்பாக பேசப்படும் இந்த விடயம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

அதிக விடுமுறையால் பணி நீக்கம்
மிகலிஸ் புய்னெங்கோ என்ற பெயருடைய அந்த நபர் Lidl என்ற நிறுவனத்தில் கடந்த 11 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். பணிக்கு ஒழுங்காக வருவதில்லை, அதிகமாக விடுமுறை எடுக்கிறார் என்று காரணம் கூறி 2021-ம் ஆண்டு இவர் வேலையிலிருந்து நீக்கப்பட்டார்.

தனது வேலை நீக்கம் செல்லாது என உத்தரவிடக்கோரி நீதிமன்றத்தின் உதவியை நாடினார் மிகலிஸ்.

இவர் இதற்கு முன்பும் கூட இப்படி 10 முறை விடுமுறை எடுத்துள்ளார் என்றும் நிர்வாகத்திடம் முறையாக அனுமதி பெறாமல் 13 முறை நீண்ட விடுப்பு எடுத்துள்ளார் என்றும் நிறுவனம் சார்பில் வாதிட்ட சட்டத்தரணி கூறினார்.

மேலும், விடுமுறை எடுத்ததற்கான சரியான காரணம் கூறவில்லை என்பதாலும் பல முறை பணி நேரம் முடியும் முன்பே விரைவாக வீட்டிற்குச் சென்றுவிடுவதாலுமே இவரை வேலையை விட்டு நீக்கியுள்ளோம் என்றும் அந்த சட்டத்தரணி வாதாடினார்.

வழக்கமாக இந்த நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் வருடத்திற்கு ஆறு நாட்கள் விடுமுறை எடுக்கலாம். ஆனால் மிகலிஸோ பணி நாட்களின் 20 சதவிகிதத்தை விடுமுறை எடுத்துள்ளார். இவர் பணிக்கு வராததன் காரணமாக, இவரது வேலையையும் சேர்த்து சக பணியாளர்கள் கூடுதலாக வேலை செய்துள்ளார்கள். இப்படி ஓயாமல் விடுமுறை எடுக்காதீர்கள் என அவரிடம் பலமுறை கூறியும் அவர் தனது நடத்தையை மாற்றிக் கொள்ளவில்லை. அதனால்தான் இந்த முடிவை எடுத்தோம் எனக் கூறுகிறார் இந்நிறுவனத்தின் மேலாளர்.

உடல்நிலை சரியில்லாத காரணத்தினால்
உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் பல நாட்கள் நான் மருத்துவமனையில் இருந்தேன். அதனால்தான் பல நாட்கள் விடுமுறை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. எனது 69 நாள் விடுமுறைக்கு மருத்துவர் கூட அனுமதி வழங்கியுள்ளார். மேலும் அதிக விடுமுறை எடுத்தால் தண்டனை வழங்கப்படும் என நிறுவன கையேடுகளில் எங்கும் குறிப்பிடப்படவில்லை.

ஆகவே என்னை மறுபடியும் வேலையில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என தனது பக்க நியாத்தை கூறினார் மிகலிஸ்.

நீதிமன்றின் தீர்ப்பால் இன்ப அதிர்ச்சி
இருவரின் வாதத்தையும் கேட்ட நீதிமன்றம், மிகலிஸின் விடுமுறை நிறுவனத்தின் நோய்க்கால விடுப்பு கொள்கையின் கீழ் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் அவருக்கு நஷ்ட ஈடாக நிறுவனத்தின் சார்பில் ரூ.14 லட்சம் வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.