;
Athirady Tamil News

உணவை பகிர்ந்து கொண்டால் அபராதம்: உணவகத்தின் விதிகளால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி

0

அமெரிக்காவில் குழந்தைகள் அழுதால் தனியாக கட்டணம் வசூலிக்கப்படும் என உணவகம் ஒன்று அறிவித்து இருப்பது அனைவரையும் அதிர்ச்சியில் தள்ளியுள்ளது.

Strict உணவகம்
அமெரிக்காவின் அட்லாண்டாவில் உள்ள toccoa Riverside என்ற உணவகம் தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு கண்டிப்பான விதிமுறைகள் மற்றும் அபார கட்டணங்கள் குறித்த தகவலை பகிர்ந்துள்ளது.

அதில் உணவகத்திற்கு வரும் குழந்தைகள் சேட்டை செய்தாலோ அல்லது கூச்சலிட்டாலோ சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்களிடம் மோசமான குழந்தை வளர்ப்பு என சுட்டிக் காட்டி அதற்காக தனியாக கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவித்துள்ளது.

அத்துடன் தங்கள் உணவகத்திற்கு வரும் வாடிக்கையாளர்கள் தங்களது உணவை உடன் வருபவர்களுடன் பகிர்ந்து கொண்டால் அதற்கென்று தனியாக 3 டொலர்களை வசூலிக்கிறது.

toccoa Riverside உணவகத்தின் இந்த செயலானது அப்பகுதியில் உள்ள வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.