சிங்கப்பூரில், இந்திய தமிழருக்கு 12 சவுக்கடியுடன் 16 ஆண்டுகள் சிறை – என்ன நடந்தது?
சிங்கப்பூரில் கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த இந்தியருக்கு அந்நாட்டு நீதிமன்றம் 16 ஆண்டுகள் சிறை தண்டனையும், 12 சவுக்கடியும் வழங்கி அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
பாலியல் வன்கொடுமை
சிங்கப்பூரில் தூய்மை பணியாளராக பணியாற்றி வந்தவர் இந்தியாவை சேர்ந்த சின்னைய்யா (26). இவர் கடந்த 2019ம் ஆண்டு இரவில் தனியாக நடந்து சென்ற கல்லூரி மாணவியை மறைவான காட்டுப்பகுதிக்கு இழுத்துச் சென்றுள்ளார்.
பின்னர் அந்த பெண்ணை கடுமையாக தாக்கி பாலியல் வன்கொடுமை செய்தார். இதனையடுத்து முகத்தில் காயங்களுடன், கழுத்து நெரிக்கப்பட்ட தடையங்களுடன் அந்த பெண் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
நீதிமன்றம் அதிரடி
இந்த கொடூர சம்பவத்தில் அடுத்த நாளே சின்னையாவை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரது மனநிலையை பரிசோதிக்க பல சுற்று உளவியல் மதிப்பீடு செய்யப்பட்டதன் காரணமாக இந்த வழக்கு 4 ஆண்டுகள் நீடித்தது.
இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த சிங்கப்பூர் நீதிமன்றம் சின்னையாவுக்கு 16 ஆண்டுகள் சிறை தண்டனையும், 12 சவுக்கடியும் வழங்கி அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.