26 வயதில் 22 குழந்தைகள்..105 இலக்கு!! ஆனா எப்படி?? வியப்பூட்டும் இளம் பெண்!!
தனது 26 வயதில் 22 குழந்தைகளுக்கு தாயாகி இளம் பெண் ஒருவர் அளித்த பேட்டி தற்போது உலகளவில் கவனத்தை ஈர்த்து வருகின்றது.
குழந்தை வளர்ப்பு
நம் வீடுகளில் ஒன்று அல்லது இரண்டு குழந்தைகளை வளர்த்து பெரியலாக்குவதே பெற்றோர்களுக்கு பெரும் சவாலானது இருந்து வருகின்றது. இன்றைய ஆண்ட்ராய்டு தலைமுறையே குழந்தையே வேண்டாம் என்று ஒரு போக்கிலும் நகர்ந்து சென்று கொண்டிருக்கிறது.
அதில், விதிவிலக்காக இளம் பெண் ஒருவர் பெரும் வியப்பூட்டும் செயலை செய்துள்ளார். 26 வயதாகும் ஜார்ஜியா நாட்டை சேர்ந்த இவர் கிறிஸ்டினா ஓஸ்டர்க் எனப்படும் இந்த இளம் பெண் தற்போது 22 குழந்தைகளுக்கு தாயாகவுள்ளார்.
26 வயசுல 22 குழந்தைகளா?
58 வயதாகும் இவரின் கணவர் கலிப் ஓஸ்டர்க் பல ஹோட்டல்களை நடத்தும் கோடிஸ்வரராவார். இந்த பெண் அளித்த பேட்டியில், தற்போது 22 குழந்தைகள் இருக்கும் தான், 105 குழந்தைகளுக்கு தாயாக வேண்டும் என்பதே தன்னுடைய இலக்கு என அதிரடியாக தெரிவித்துள்ளார்.
அதெப்படி 26 வயதில் 22 குழந்தைகள் என்ற கேள்வி பலருக்கு எழலாம். 22 குழந்தைகளில் 9 மாத குழந்தை ஒன்று மட்டுமே இவர் பெற்றெடுத்த குழந்தையாகும். மற்ற குழந்தைகள் எல்லாம் வடக்கை தாய் மூலம் பிறந்த குழந்தைகளாகும்.