விமான பயணத்தில் மறந்தும் கூட இனி இந்த பொருளெல்லாம் கொண்டுப்போக கூடாது – லிஸ்ட் இதோ.!
விமான பயணத்தில் தடைசெய்யப்பட்ட பொருட்களின் பட்டியல் தெரியவந்துள்ளது.
அமீரகம்
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் 3.5 மில்லியனுக்கும் அதிகமான வெளிநாடு வாழ் இந்தியர்கள் வசிக்கின்றனர். இங்கு உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த ஏராளமான மக்கள் கல்வி, தொழில், சுற்றுலா என பல்வேறு காரணங்களுக்காக பயணம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், மும்பை சர்வதேச விமான நிலையத்தில், தடை செய்யப்பட்ட பொருட்களை அதிகளவில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகள் எடுத்துச் செல்வது தெரியவந்துள்ளது.
இதெல்லாம் தடை
இதனால், பயணிகளின் செக்-இன் பேக்கேஜ்கள் குறைக்கப்படுவது அதிகரித்துள்ளது . உலர்ந்த தேங்காய் (கொப்பரை), பட்டாசு, தீப்பொறி, பார்ட்டி பாப்பர்கள், தீப்பெட்டிகள், பெயிண்ட், கற்பூரம், நெய், ஊறுகாய் மற்றும் பிற எண்ணெய் உணவுகள், இ-சிகரெட்டுகள்,
லைட்டர்கள், பவர் பேங்க்கள் மற்றும் ஸ்ப்ரே பாட்டில்கள் ஆகியவை முக்கிய தடை செய்யப்பட்ட பொருட்களாக பட்டியலிடப்படுகிறது. இந்த பொருட்கள் பொதுவாக தீ விபத்துகள் மற்றும் வெடிப்புகளை ஏற்படுத்தும் என்றும் மும்பை விமான நிலையம் தெரிவித்துள்ளது. ஆகவே பாதுகாப்பு காரணங்களுக்காக மட்டுமே இந்த பொருட்களை விமானத்தில் அனுமதிப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.