தாழ் நிலப்பகுதிகளில் வெள்ள அபாயம்; மக்களுக்கு எச்சரிக்கை!
தெதுறு ஓயாவின் தாழ் நிலப்பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் காணப்படுவதாக நீர்ப்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது.
நேற்று ஞாயிற்றுக்கிழமை (29) இரவு முழுவதும் பெய்த பலத்த மழை காரணமாக தெதுறு ஓயா நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் வினாடிக்கு 14,000 கன அடி வீதம் திறந்து விடப்படுவதாகவும் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக தெதுறுஓயாவை அண்டிய பிரதேசங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
எனவே குறித்த பிரதேசங்களில் வாழும் மக்களை மிகவும் அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், அவ்வழியாக செல்லும் சாரதிகள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.