;
Athirady Tamil News

சிறுவர்களின் ஊட்டச்சத்து குறைபாடு தொடர்பில் சுகாதார பிரிவுக்கு ஆலோசனை : விசேட நாடாளுமன்ற தெரிவுக்குழு

0

ஊட்டச்சத்து நிலைமை தொடர்பில் ஆராயும் மற்றும் அதற்கான தீர்வை முன்வைக்கும் விசேட நாடாளுமன்ற தெரிவுக்குழு, சுகாதார பிரிவுக்கு விசேட ஆலோசனையை ஒன்றினை வழங்கியுள்ளது.

அவ்வகையில், சிறுவர்களின் ஊட்டச்சத்து குறைபாடு தொடர்பான தற்போதைய சரியான தரவுகளை, எதிர்வரும் பாதீட்டுக்கு முன்னதாக சமர்ப்பிக்குமாறு, சுகாதார பிரிவுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

பொதுப் பிரேரணை
மேலும், சரியான தரவுகளின் பிரகாரம் சிறுவர் ஊட்டச்சத்து குறைபாட்டை நிவர்த்திப்பது தொடர்பான பொதுப் பிரேரணையை நாடாளுமன்றத்தில், சமர்ப்பிக்க முடியும் என குறித்த குழு சுகாதார அதிகாரிகளிடம் சுட்டிக்காட்டியுள்ளது.

அத்துடன், அரச நிறுவனங்கள் முன்வைக்கும் புள்ளிவிபர அறிக்கைகளில் இருந்து நாட்டின் உண்மையான நிலைமை வெளிப்படவில்லை எனவும் விசேட நாடாளுமன்ற குழு தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.