யாழில் சிக்கிய வவுனியாவில் திருடப்பட்ட பல லட்சம் மதிப்பிலான ஐம்பொன் சிலை!
வவுனியாவில் திருடப்பட்ட 30 லட்சம் ரூபாய் பெறுமதியான ஐம்பொன் சிலை யாழ்ப்பாணத்தில் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் ஐந்து சந்தி பகுதியில் வைத்து இன்றைய தினம் (30-10-2023) இந்த ஐம்பொன் சிலை கைப்பற்றப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டது.
இதேவேளை, சிலையை கடத்தி வந்தவர் தலைமறைவாகிய நிலையில் தேடப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ்ப்பாண பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் பரிசோதகர் ரி.மேனன் தலைமையிலான மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரே இந்த நடவடிக்கை மேற்கொள்லப்பட்டுள்ளது.
வவுனியாவில் திருடப்பட்ட ஐம்பொன் சிலை ஒன்று யாழ்ப்பாணம் ஐந்து சந்தியில் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் அந்தப் பகுதிக்கு பொலிஸார் சென்ற போது அதனை கடத்தி வந்தவர் தப்பித்தார்.
சிலை கைப்பற்றப்பட்டு யாழ் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்றும் பொலிஸார் கூறினார்.