;
Athirady Tamil News

யாழில். வெள்ளை வானில் வந்த கும்பல் வீடு புகுந்து கொள்ளை

0

யாழ்ப்பாணத்தில் வெள்ளை வானில் வந்தவர்கள் வீடு புகுந்து 5 இலட்ச ரூபாய் பணம் மற்றும் அரை பவுண் சங்கிலி என்பவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

வடமராட்சி கிழக்கு, வத்திராயன் பகுதியில் உள்ள வீடொன்றினுள் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை வெள்ளை நிற வானில் சென்ற கும்பல் ஒன்றும் வீட்டினுள் அத்துமீறி நுழைந்து , வீட்டில் இருந்தவர்களின் அடையாள அட்டையை காண்பியுங்கள் என மிரட்டி அவர்களின் அடையாள அட்டைகளை பரிசோதித்துள்ளனர்.

பின்னர் வீடு புகுந்து சோதனையிட்ட கும்பல் , வீட்டின் உரிமையாளர் காணி ஒன்றினை கொள்வனவு செய்வதற்காக வைத்திருந்த 5 இலட்ச ரூபாய் பணத்தினையும் , அதனுடன் இருந்த அரை பவுண் சங்கிலியையும் எடுத்து சென்றுள்ளனர்.

தம்மை அடையாளப்படுத்தாது , வீட்டினுள் திடீரென புகுந்து அடையாள அட்டைகளை பரிசோதித்து , வீட்டினையும் சோதனையிட்டு , பணத்தினை எடுத்து சென்றமை தொடர்பில் மருதங்கேணி பொலிஸாரிடம், வீட்டிற்கு வந்தது பொலிசாரின் ஏதாவது பிரிவா என வினாவிய போது , அவ்வாறு யாரும் நேற்றையதினம் சோதனை நடவடிக்கையில் ஈடுபடவில்லை என பொலிஸார் தெரிவித்ததை அடுத்து, பொலிஸ் நிலையத்தில் சம்பவம் தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.