நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்ட இஸ்ரேலிய பிரதமர்!
இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில், கடந்த 7ம் திகதி நடந்த ஹமாஸ் தாக்குதல் குறித்து இஸ்ரேல் ராணுவம் மற்றும் உளவு அமைப்புகள் எந்தவொரு முன்னெச்சரிக்கையும் வழங்கவில்லை என இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சமூக வலைதளத்தில் குற்றம்சாட்டி இருந்தார்.
இஸ்ரேல் நாட்டிற்காக உயிரை பணயம் வைத்து சண்டை போட்டு வரும் ராணுவத்தினர் குறித்து எதிர்மறையாக பிரதமர் நெதன்யாகு கருத்து தெரிவித்து விட்டதாக பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
கண்டனங்கள்
அத்துடன் பிரதமர் நெதன்யாகுவின் கூட்டணி மற்றும் எதிர் கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகளும் இதற்கு வலுவான கண்டங்களை தெரிவித்தனர்.
இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவிற்கு பிரதமர் நெதன்யாகு வருத்தம் தெரிவித்து இருப்பதுடன், அந்த பதிவையும் நீக்கியுள்ளார்.
மேலும் மன்னிப்பு கேட்டு வெளியிட்டுள்ள பதிவில், நான் தவறு செய்து விட்டேன், நான் வெளியிட்ட கருத்துக்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன், நமது நாட்டின் ராணுவத்திற்கு எப்போதும் முழு ஆதரவு வழங்குவேன் என தெரிவித்துள்ளார்.