ஹமாஸ் படைகளிடம் குவிந்து கிடக்கும் நிதி… எந்த நாடுகள் உதவுகிறது
ஹமாஸ் படைகளுக்கு ஆண்டுக்கு 1.5 பில்லியன் பவுண்டுகள் பொதுவாக தேவைப்படும் என முன்னாள் இஸ்ரேல் உளவுத்துறை அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
சட்டவிரோத பணம்
ஈரான், கத்தார் உள்ளிட்ட நாடுகளில் இருந்து சட்டவிரோத பணம் ஹமாஸ் கைகளுக்கு மாற்றப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் துருக்கியில் இருந்தும் ஹமாஸ் படைகளுக்கான நிதி அளிக்கப்படுவதாக அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
கத்தாரில் இருந்து மட்டும் ஆண்டுக்கு 400 மில்லியன் பவுண்டுகள் ஹமாஸ் படைகள் பெறுகின்றனர். ஈரானில் இருந்து சுமார் 200 மில்லியன் பவுண்டுகள் அளிக்கப்படுகிறது.
மேலும், ஐக்கிய அரபு அமீரகம், சூடான் மற்றும் அல்ஜீரியாவில் செயல்படும் சில நிறுவனங்கள் ஹமாஸ் படைகளுக்கு உதவு கின்றன. ஹமாஸ் மிக சிறிய பயங்கரவாத அமைப்பு தான், ஆனால் அவர்களிடம் பணம் கொட்டிக்கிடப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
அக்டோபர் 7ம் திகதி இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதலை தொடுத்த பின்னர், இவர்களுக்கு தொடர்புடைய வங்கிக் கணக்கு ஒன்று முடக்கப்பட்டுள்ளது. மட்டுமின்றி, 2021 டிசம்பர் முதல் இந்த ஆண்டு ஏப்ரல் வரையில் ஹமாஸ் தொடர்புடைய 200 கிரிப்டோ கணக்குகளை இஸ்ரேல் முடக்கியுள்ளது.