வாழைத்தண்டு சாப்பிடுவதால் உடலுக்கு இவ்வளவு நன்மைகள் வந்தடையுமா!
வாழை மரத்தின் பூவில் தொடங்கி வாழைத்தண்டு வரை ஒவ்வொரு பகுதியும் ஆரோக்கியத்திற்கு சிறந்தவை.
வாழைத்தண்டு நார்ச்சத்து அதிகம் நிறைந்தவை இது புண்கள் அல்லது வயிற்றில் அமிலத்துக்கு சிகிச்சை அளிக்க உதவும்.
வாழைத்தண்டுகளில் பொட்டாசியம் மற்றும் வைட்டமின் பி 6 போன்றவற்றை கொண்டுள்ளது. இது உடலில் ஹீமோகுளோபின் மற்றும் இன்சுலின் உற்பத்தியை மேம்படுத்துகிறது.
கிடைக்கும் நன்மைகள்
வாழைத்தண்டில் நிறைந்துள்ள நார்ச்சத்து மற்றும் குறைந்த அளவு கலோரிகள் நீண்ட நேரத்திற்கு நிறைவாக வைத்திருக்கும் இதனால் எடை இழப்புக்கு வழிவகுக்கிறது.
வாழைத்தண்டை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் நெஞ்செரிச்சல் அல்லது அசிடிட்டி பிரச்சனைக்கு சிறந்த பலன்களை கொடுக்கும்.
மேலும் வாழைத்தண்டில் நிறைந்துள்ள நார்ச்சத்துக்கள் செரிமானத்தை மேம்படுத்த உதவுகின்றன.
வாழைத்தண்டில் நிறைந்துள்ள வைட்டமின் B6 மற்றும் இரும்பு சத்துக்கள் இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவுகளை அதிகரிக்க உதவுகின்றன.
அதேபோல் வாழைத்தண்டில் காணப்படும் பொட்டாசியம் சத்துக்கள் கொலஸ்ட்ராலை நீக்கவும் உயிர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும் உதவுகின்றன.
மேலும் வாழைத்தண்டு உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் இதயம் மற்றும் உடலின் தசைகளை வலுப்படுத்துகிறது.
சிறுநீரகக் கல் பிரச்சனை உள்ளவர்கள் வாழைத்தண்டு ஜூஸுடன் சிறிதளவு ஏலக்காயை சேர்த்து எடுத்துக் கொள்ளலாம். இது சிறுநீரக கல் பிரச்சனைகளை தடுக்க உதவுகிறது.
மேலும் சிறுநீரக பாதை தொற்றினால் ஏற்படும் வலி மற்றும் அசௌகரியத்தையும் குறைக்கிறது. உடலின் இன்சுலின் அளவுகளை சீராக வைத்துக் கொள்ள வாழைத்தண்டு உதவும்.இதில் நிறைந்துள்ள நார்ச்சத்து சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது.
மேலும் இரத்த சர்க்கரையின் அளவுகளை கட்டுக்குள் வைத்திருக்க வாழைத்தண்டு ஜூஸை வடிகட்டாமல் குடிக்கலாம்.