;
Athirady Tamil News

1,200 ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த உலகப் பணக்காரர்! அப்படி என்ன செய்தார் தெரியுமா?

0

அமெரிக்க பில்லியனர் ஒருவர் தனது 1,200 ஊழியர்கள் ஜப்பானுக்கு 3 நாட்கள் பயணம் செய்ய ஏற்பாடு செய்து இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார்.

Citadel LLC

ஊழியர்களுக்கு கொண்டாட்ட ஏற்பாடு அமெரிக்காவைச் சேர்ந்த பில்லியனர் கென்னத் சி.கிரிஃப்பின். இவரது Citadel LLC நிறுவனத்தின் கிளைகள் ஹாங் காங், சிங்கப்பூர், சிட்னி, ஷாங்காய், டோக்கியோ மற்றும் குருகிராம் ஆகிய 6 நகரங்களில் அமைந்துள்ளன.

இதில் பணிபுரியும் 1,200 ஊழியர்களுக்கு கென்னத் இன்ப அதிர்ச்சி அளித்தார். அதாவது ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர்கள் ஜப்பானின் டோக்கியோவில் உள்ள வால்ட் டிஸ்னி வேர்ல்டில் 3 நாட்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட ஏற்பாடு செய்தார்.

இதனால் அக்டோபர் 27 முதல் 29ஆம் திகதி வரை அவரது ஊழியர்கள் தங்கள் குடும்பத்தினருடன் அங்கு மகிழ்ச்சியாக பொழுதை கழித்துள்ளனர். ஊழியர்களின் பயணம், தங்கும் ஹொட்டல்கள், உணவு, டிஸ்னி டிக்கெட்டுகள், பொழுதுபோக்கு மற்றும் குழந்தை பராமரிப்புக்கான அனைத்து செலவுகளையும் கென்னத் ஏற்றுக் கொண்டுள்ளார்.

மேலும், அவர் தமது ஊழியர்களுக்கு விரைவான பாஸ்களை கொடுத்ததால் அவர்கள் பெரிய சவாரிகள் மற்றும் பிற பெரிய இடங்களுக்கு வரிசையில் காத்திருப்பது தவிர்க்கப்பட்டது.

400க்கும் மேற்பட்ட பணியாளர்கள்
கென்னத்தின் சொத்து மதிப்பு கென்னத் சி.கிரிஃப்பின் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் இதேபோன்று தனது அமெரிக்க, கனேடிய மற்றும் ஐரோப்பிய ஊழியர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் இதேபோன்று ஒரு கொண்டாட்ட ஏற்பாட்டை செய்திருந்தார்.

Bloomberg Billionaires Indexயின்படி, கென் கிரிஃப்பினின் சொத்து மதிப்பு 35.4 பில்லியன் ஆகும். மேலும், சிட்டாடல் மற்றும் சிட்டாடல் செக்யூரிட்டீஸ் கடந்த மூன்று ஆண்டுகளில் தங்கள் எண்ணிக்கையை இரட்டிப்பாக்கியுள்ளன.

தற்போது ஆசியாவில் மட்டும் 400க்கும் மேற்பட்ட பணியாளர்கள் இவற்றில் பணிபுரிகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.