கூகுள் கிட்ட கேட்டுதான் இனி மூச்சே விடனும்; அப்படி நிலைமை – ஏன் தெரியுமா?
காற்று மாசு தொடர்பாக கூகுள் நிறுவனம் நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது.
காற்று மாசு
டெல்லி, மும்பை, பெங்களூர் உள்ளிட்ட நகரங்களில் காற்று மாசு மிகப் பெரிய பிரச்சணையாக தலைவிரித்தாடுகிறது. வீட்டை விட்டு வெளியேறினால் மூச்சு விடுவதே இப்போதெல்லாம் நுரையீரலுக்குப் பெரிய போராட்டமாக இருக்கிறது.
இதனால், வெளியே செல்வதற்கு முன் காற்றின் தரத்தை சரிபார்ப்பது மிகவும் அவசியமாகிறது. இந்நிலையில், கூகுளில் டிஸ்கவர் தளத்தில் காற்று மாசு குறித்துத் தெரிந்து கொள்ள உதவும் AQI எனப்படும் காற்று தர மதிப்பீடு குறித்த கார்டை கூகுள் வெளியிடுகிறது.
கூகுள் டிஸ்கவர்
மொபைல்களில் மட்டுமே இந்த வசதி வழங்கப்படுகிறது. காற்றின் தரம் குறித்த இந்த கார்டுகள் ரியல் லைமில் மாறிக் கொண்டே இருக்கும். அப்டேட் ஆகிக்கொண்டே இருக்கும். காற்றின் தரம் மாறினால் அதற்கேற்ப நிறமும் மாறும்.
இதன் மூலம் பொதுமக்கள் தாங்கள் இருக்கும் பகுதியின் காற்றின் தரம் குறித்து நொடிகளில் தெரிந்து கொள்ள முடியும். ஆண்டிராய்டு சாதனத்தில் வரும் ஏர் குவாலிட்டி தகவல்களைக் காட்டிலும் ஆப்பிள் சாதனங்களில் வரும் தரவுகள் விரிவானதாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த வசதி படிப்படியாக அனைத்து சாதனங்களுக்கும் வழங்கப்படும் என்று கருதப்படுகிறது.