யாழ்ப்பாணத்தில் மோட்டார் சைக்கிள் திருட்டு அதிகரிப்பு
யாழ் குடாநாட்டில் கடந்த எட்டு மாதங்களில் 19 மோட்டார் சைக்கிள் திருட்டுப் போயுள்ளதாக யாழ்ப்பாண பொலிசார் தெரிவித்தனர்.
நகரப் பகுதிகளில் நிறுத்திவிட்டு கடைகளுக்கு செல்லும் பொழுது இவ்வாறான திருட்டு சம்பவங்கள் அதிக அளவில் இடம்பெற்றுள்ளன.
தமது மோட்டார் சைக்கிள் மற்றும் வாகனங்கள் தொடர்பில் உரிமையாளர்கள் மிக அவதானத்துடன் செயல்படுவதுடன், மோட்டார் சைக்கிளின் பாதுகாப்பினை ஒன்றுக்கு இரண்டு தடவைகள் உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு பொலிசார் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
குறிப்பாக கேண்டில் லொக்கினைப் (handle lock) பயன்படுத்திவிட்டு செல்லுமாறு பொலிசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
திருடப்படும் மோட்டார் சைக்கிள் திட்டமிட்ட குற்றச்செயல்கள் மற்றும், உதிரிபாகங்களாக மாற்றி விற்பனை செய்யும் நடவடிக்கைகளில் ஒரு சில கும்பல்கள் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருவது அவதானிக்கப்பட்டுள்ளது.
அந்தக் கும்ப தொடர்பில் தகவல்கள் தெரிந்தவர்கள் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்துக்கு 021222 2222 என்ற தொலைபேசி இலக்கத் ஊடாக தகவல் தெரிவிக்க முடியுமென பொலிசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.