;
Athirady Tamil News

பத்து வருடங்களின் பின் இலங்கையில் சனத்தொகை கணக்கெடுப்பு: இன்று முதல் ஆரம்பம்

0

இலங்கையில் பத்து வருடங்களுக்கு ஒருமுறை நடத்தப்படும் சனத்தொகை மற்றும் வீட்டுக் கணக்கெடுப்பு இன்றைய தினம் அதிபர் செயலகத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இந்தக் கணக்கெடுப்பில் பதிவு செய்யப்பட்ட முதலாவது கட்டடமாக அதிபர் செயலகம் பட்டியலிடப்பட்டுள்ளதாக அதிபர் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு குடிசன மதிப்பீட்டில் தரவு சேகரிப்புக்கு அச்சிடப்பட்ட ஆவணங்களுடன் டெப்லட் எனப்படும் இலத்திரனியல் உபகரணமும் பயன்படுத்தப்படவுள்ளது.

இதேவேளை, கடந்த 2011 ஆம் ஆண்டு சனத்தொகை மற்றும் வீட்டுக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.