;
Athirady Tamil News

செயலியின் மூலமாக மக்களி்ன் தனித்துவமான தகவல்களை திருடும் அபாயம்

0

டார்க் வெப் (Dark web) என்பது நாம் சாதாரணமாக அணுக முடியாத இணையத்தின் பகுதியாகும். இந்த டார்க் வெப் (Dark web) இணையத்தளங்களும் தேடுபொறிகளினால் வரிசைப்படுத்தப்பட்டிருக்காது.

மேலும் டார்க் வெப் (Dark web) இணையக்குற்றங்கள் அதிகளவு நடைபெறுகின்ற இணையத்தின் பகுதியாகும்.

அவ்வகையில், இலங்கையின் முக்கிய தொலைபேசி செயலி (APP) மூலம் டார்க் வெப்பில் (Dark web) இலங்கையர்களின் மிகவும் தனித்துவமான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

மின்னஞ்சல் முகவரிகள்
இதன் மூலம் இலட்சக்கணக்கான இலங்கையர்களின் மின்னஞ்சல் முகவரிகள் தொடக்கம் வங்கி அட்டை இலக்கங்கள் வரையிலான அதி முக்கிய தரவுகள் வெளியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் நபர்கள் இது குறித்து சமூக ஊடகங்களில் பதிவுகளை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆனால், இதுவரை அது குறித்து சம்பந்தப்பட்ட நிறுவனம் எந்தவித விளக்கமும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.