அனைத்து பல்கலைக்கழங்களிலும் இன்று அடையாள வேலைநிறுத்த போராட்டம்
நாடுதழுவிய ரீதியில் 17 அரச பல்கலைக்கழகங்களும் இன்று (02) அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளன.
சம்பளப் பிரச்சினைகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு வழங்கப்படும் நிதியில் உள்ள குறைவு போன்ற பல கோரிக்கைகளை உள்ளடக்கியே இந்த வேலைநிறுத்த போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
நேற்றைய தினம் (01) நாவலவிலுள்ள இலங்கை திறந்த பல்கலைக்கழக வளாகத்தில் அரச சேவை தொழிற்சங்கக் கூட்டமைப்பு மற்றும் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் என்பன இணைந்து நடாத்திய கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
சம்பள உயர்வு கோரி
மேலும், வரிவிதிப்பு மற்றும் அரசாங்கத்தின் தன்னிச்சையான வரிக் கொள்கை ஆகியவற்றிற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்றைய தினம் (01) கொழும்பில் எதிர்ப்பு பேரணி ஒன்றும் இடம்பெற்றது.
இந்த பேரணியில், அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் மற்றும் பல தொழிற்சங்கங்கள் போன்ற பல்வேறு அமைப்புகளும் பங்கேற்றிருந்தது.
அதேபோல் நேற்றைய தினம் (01) வடமாகாணத்தில் சுகாதார அதிகாரிகளின் பங்குபற்றலுடன் சம்பள உயர்வு கோரிய போராட்டங்களும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.